சென்னை புத்தகக் காட்சி 2010

சென்ற வாரம் ஞாயிற்றுகிழமை (10-01-2010) அன்று 33வது சென்னை புத்தகக் காட்சி செல்ல வாய்ப்பு கிடைத்தது. இது வரை நான் அதிகமாக புத்தகங்கள் வாங்கியதும் இல்லை, படித்ததும் இல்லை. இதில் இருந்தே எனது இலக்கிய ஆவலை தெரிந்து கொள்ளலாம். அதற்கு காரணம் நான் வளர்ந்த சூழ்நிலை. ஆனால் 2008-ல் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாழ்க்கையை நண்பன் சொல்வதை கேட்டு படித்தேன், அதன் பிறகு தான் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் எனக்கு பிறந்தது, அதே வேகத்தில் பார்த்திபன் கனவு, என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, சுஜாதாவின் சிறு கதைகள் என்று தேடி படிக்க ஆரம்பித்தேன். ஏனோ, சில மாதங்களுக்கு பிறகு புத்தகங்கள் படிப்பது குறைந்தது. பல பதிவர்களின் நல்ல சிறுகதைகள் படித்ததின் தாக்கமாக இருக்கலாம். பதிவர்களின் கதைகளை படிக்க ஆரம்பித்த பிறகு, நல்ல பதிவுகளை தேடி படிக்க ஆரம்பித்தேன். வேலை பளு காரணமாக கடந்த சில மாதங்களாக அதுவும் குறைந்தது. சில நாட்களாக செந்தில் குமரன் எழுதி வரும் கிழக்கு பதிப்பக புத்தகங்களின் விமர்சனங்கள் மூலமாக என்னுள் மீண்டும் புத்தகம் படிக்கும் ஆவல் துளிர்த்தது. கடந்த வாரம் சென்னை செல்ல வாய்ப்பு கிடைத்ததால் புத்தகக் காட்சியை காண முடிவு செய்தேன். அங்கே சென்று கிழக்கு பதிப்பகத்தில் இருந்து பல புத்தகங்களை எடுத்தேன். என்னுடைய பொருளாதார பயத்தால் சில புத்தங்களை மனமில்லாமல் திரும்ப வைத்துவிட்டு, கையில் 7 புத்தங்கள் மட்டும் எடுத்து வந்தேன். இப்போது கையில் இருக்கும் 7 புத்தங்களை படித்து விட்டு அந்த அனுபவத்தை இங்கே எழுத ஆசை உள்ளது.

பார்போம் என்ன நடக்கிறது என்று!!!

வாங்கிய புத்தகங்கள்:
1. ரமண சரிதம் – மதுரபாரதி
2. கி.மு. கி.பி. - மதன்
3. ஹிட்லர் – பா.ராகவன்
4. 1857 சிப்பாய் புரட்சி – உமா சம்பத்
5. அண்ணாந்து பார்! - என். சொக்கன்
6. சே குவேரா – மருதன்
7. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - மருதன்

பி.கு:1 – இது என்னுடைய முதல் தமிழ் பதிவு. தவறுகள் இருந்தால் மன்னித்து, சுட்டி காட்டினால் திருத்தி கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
பி.கு:2 – எனக்கு தமிழ் பதிவு எழுத ரொம்ப நாள் ஆசை, ஆனால் கணிணியில் அமர்ந்தால் 2 வரிகள் அடித்த பிறகு என்ன அடிப்பது என்று தெரியாமல் முழிப்பேன். செந்தில் குமரன் சொன்ன யோசனையை கொண்டு முதலில் மனதில் தோன்றியதை வெள்ளை தாளில் எழுதி வைத்து பிறகு பதிவு இடுகிறேன். இந்த யோசனையை கூறிய செந்திலுக்கு நன்றி :)