ரமண சரிதம்

”நான் யார்? ” என்ற கேள்வியை கேட்டால் பலரிடமிருந்து பெயரோ அல்லது இன்னாரது பிள்ளை என்றோ பதில் வரும். ஆனால் ”நான் யார்? ” என்ற கேள்வியின் மூலம் கடவுளின் பாதையை அடையலாம் என்று ரமண மகரிஷி வாழ்ந்து காட்டியுள்ளார். அந்த கேள்வியின் சக்தியை உணர வேண்டுமென்றால் ரமணரின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டும்.

மதுரபாரதி எழுதிய “ரமண சரிதம்” புத்தகம் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட என்னை பல தேடலுக்கு ஊக்குவிக்க தூண்டுகோலாக அமைந்தது.

என்னுடைய 16-வது வயதில் எனது ஆசிரியிர் மூலம் ஆன்மீக விடயங்களில் ஒரு வகையான ஈர்ப்பு ஏற்பட்டது. பின்பு கல்லூரி காலங்களில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியாதால் மற்ற விடயங்களில் ஆர்வம் செல்லவில்லை.

ஏதோ ஒரு தூண்டுதலின் பேரில் “ரமண சரிதம்” படிக்க ஆரம்பித்தேன். முதலில் எனக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்திய ரமணர் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக என்னை சிந்திக்க வைத்தார்.

“வெங்கடராமன்”-ஆக திருச்சூழியில் பிறந்து “நான் யார்?” என்ற விசாரணையின் மூலம் ஆத்மானுபவம் பெற்று, பின்பு திருவண்ணாமலையை (அருணாச்சலத்தை) அடைந்து பல இடங்களில் தங்கி தியான்ம் செய்துள்ளார் ரமணர். சில சிறுவர்கள் இவர் மீது கல் எறிந்து துன்புறுத்தியுள்ளனர். இதை கண்ட சேஷாத்ரி சுவாமிகள், ரமணரை பாதாள லிங்க அறையில் அமர வைத்து, பின்பு உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளார். தம்மை நாடி வந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் காட்சி அளித்து உள்ளார். உலகின் ஆன்மீக ரேகையில் திருவண்ணாமலை உள்ளது என்பத்தை அறிந்து அதை பற்றிய விடங்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும் ரமணர் இருந்த இடங்களை பற்றியும் அவர் சந்தித்த மனிதர்கள், ரமண ஆசிரமம் உருவான விதம், ரமணர் செய்த அருட்பெறும் காரியங்கள், ரமணரின் மரண தருவாயில் நடந்த விடயங்கள் போன்ற பற்பல சரித்திர விடயங்களை அழகே தொகுத்துள்ளார் மதுரபாரதி.

இப்புத்தகத்தில் சேஷாத்ரி சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் போன்றவார்களை பற்றியும் விவரித்துள்ளார்.

வாழ்க்கையை முழுமையாக புரிந்து கொள்ள விருப்பமுடையவர்கள் ரமணர் போன்றவர்களின் வரலாற்றை படிக்க வேண்டும். அதற்கு இப்புத்தகம் மிகவும் நல்ல தொடக்கமாக இருக்கும்.